முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்முனைவோருக்கு முன்மாதிரியாக திகழும் ஆட்டோ டிரைவருக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

வாடிக்கையாளர்களுக்கு வைபை, செய்தித்தாள்கள் என பல வசதிகளை இலவசமாக வழங்குவதோடு மட்டுமல்லாது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வாடிக்கையாளர்களிடம் பெற்று வரும் ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரையை டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேரில் வரவழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.  

சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார்.  இவர் தனது தொழிலை நேர்மையாகவும், புதுமையாகவும் செய்து இளைஞர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் முன்மாதிரியாக விளங்கி வருகிறார். தனது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு வை-பை, செய்தித்தாள்கள், வார இதழ்கள், டேப்லட், சிறிய குளிர்சாதனப்பெட்டி, சாக்லேட், ஸ்நாக்ஸ்

என பல வசதிகளை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார். மேலும் வாடிக்கையாளர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெறுகிறார்.  ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரையை, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு நேற்று டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து