முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

86 காங்கிரஸ் வேட்பாளர்களுடன் அமிர்தசரஸ் பொற்கோயிலில் வழிபாடு செய்த ராகுல் காந்தி

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமிருதசரஸ் பொற்கோயிலில் வழிபாடு செய்தார். 

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிப். 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 86 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஒரு நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப் சென்றுள்ளார். டெல்லியிலிருந்து நேற்று காலை அமிர்தசரஸ் வந்த ராகுல் காந்தி, மாநில முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் அமிருதசரஸ் பொற்கோயிலில் வழிபாடு செய்தார்.  இதையடுத்து, ஜலந்தர் செல்லும் ராகுல் காந்தி, நேற்று மாலை காணொலி மூலமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். 

இதற்கிடையே பஞ்சாப் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மணீஷ் திவாரி, ரவ்நீத் சிங் பிட்டு, ஜஸ்பீர் சிங், ப்ரினீத் கவுர், முகம்மது சாதிக் ஆகிய 5 எம்.பி.க்கள் ராகுல் வருகையை புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜஸ்பீர் சிங் கூறுகையில், 'கூட்டத்தில் பங்கேற்பதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி, சட்டப்பேரவையில் போட்டியிடும் 117 வேட்பாளர்களுக்கானது. முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர்கூட எங்களை அழைக்கவில்லை. அழைப்பு வந்திருந்தால் கண்டிப்பாக சென்றிருப்போம்' என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து