முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1964 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் ஜாம்பவான் சரண்ஜித் மரணம்

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சிம்லா: 1964-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக சரண்ஜித் சிங் நேற்று மரணமடைந்தார்.

அணியின் கேப்டன்...

இந்திய ஹாக்கி அணியின் ஜாம்பவான் சரண்ஜித் சிங். இமாச்சலபிரதேச மாநில உனா மாவட்டத்தில் 1930 நவம்பர் 22-ம் தேதி சரண்ஜித் சிங் பிறந்தார்.  1964-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. தங்கம் வென்ற இந்திய அணியின் கேப்டனாக சரண்ஜித் சிங் செயல்பட்டார். அதேபோல், 1960-ம் ஆண்டு நடைபெற்ற ரோம் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய அணியிலும் சரண்ஜித் சிங் இடம்பெற்றிருந்தார்.

மாரடைப்பால்...

ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சரண்ஜித் சிங் சிம்லாவில் உள்ள இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித்துறையின் இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், 90 வயதான சரண்ஜித் சிங் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இமாச்சலபிரதேசம் உனாவில் உள்ள தனது வீட்டில் சரண்ஜித் சிங் உயிரிழந்தார். நீண்டகாலம் உடல்நலக்குறைவு, வயது முதிர்வு மற்றும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சரண்ஜித் சிங் நேற்று மரணமடைந்தார். சரண்ஜித் சிங்கின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து