முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரியை தாக்கிய தி.மு.க. எம்.எல்.ஏ. மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வருக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். வலியுறுத்தல்

சனிக்கிழமை, 29 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

அரசு அதிகாரியை தாக்கிய தி.மு.க. வை சேர்ந்த எம்.எல்.ஏ. மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் மீது சட்டரீதியான நடவடிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  வலியுறுத்தி உள்ளனர். 

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர் மற்றும் அவரது உதவியாளர், திருவெற்றியூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். அரசுப் பணிகளில் கட்சியினரின் தலையீடு இருக்கக்கூடாது என்று சொன்ன அண்ணாவின் கூற்றிற்கு முற்றிலும் முரணான ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. 

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உண்மையான நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், தான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உறுதி மொழி எடுத்துக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அரசு அதிகாரியை தாக்குவது என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும்.  இந்திய அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில் அவர் செயல்பட்டு இருக்கிறார். சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர் மற்றும் உதவியாளர் மீதான சட்டமன்ற உறுப்பினரின் இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தி.மு.க.வினரும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு ஒப்பந்தங்களில் தலையிடுவது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பரவலாக உள்ளது. எனவே, முதல்வர்  இதில் உடனடியாகத் தலையிட்டு,  அரசு அதிகாரியைத் தாக்கிய திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் மற்றும் அங்கு வந்த தி.மு.க.வினைரை சட்டத்தின்முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். இதே போல் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து