முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தே.மு.தி.க. முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

திங்கட்கிழமை, 31 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தே.மு.தி.க சார்பில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னதாக தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

கடந்த 28-ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் வரும் 4-ம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை வரும் 5-ம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற  7-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.  திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 25 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!