முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாரோ இசை வெளியீடு

திங்கட்கிழமை, 31 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

TRIDENT ARTS R. Ravindran வழங்கும் யாரோ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை தயாரித்து அதில் நாயகனாகவும் நடித்திருப்பவர் வெங்கட் ரெட்டி. இவர் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், எல்லா நடிகருக்கும் ஒரு அபூர்வமான கதா பாத்திரம் கிடைத்து விடாது.  ஆனால் எனக்கு என் முதல் படத்திலேயே கிடைத்திருக்கிறது என்றார். இயக்குனர் சந்தீப்பின் திறமையை இந்த படத்தில் காணலாம். நாயகி உபாசனா யாரும் நடிக்க தயங்கும் சவாலான பாத்திரத்தில் ஒப்புக்கொண்டு நடித்திருக்கிறார். ஒரு புதுமையான ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது என்றார். இயக்குநர் சந்தீப் சாய் பேசுகையில் இப்படம் சர்வதேச தரத்திற்கு இணையாக உருவாகியுள்ளதில் மகிழ்ச்சி என்றார். TAKEOK PRODUCTIONS சார்பில் வெங்கட் ரெட்டி தயாரிப்பில் உருவான இப்படம் அடுத்த வாரம் வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து