முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்ரமின் 60-வது திரைப்படம் மகான்

திங்கட்கிழமை, 31 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

விக்ரம் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் மகான். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க செவன் ஸ்கிரீன் லலித்குமார் தயாரிக்கிறார். இப்படம் தமிழ் மலையாளம், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் இம்மாதம் 10ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியிடப்படுகிறது. படம் பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், நாயகனான மகான், ஒரு கட்டத்தில் அவரது குடும்பத்தை விட்டு பிரிகிறார். பல ஆண்டுகள் கழித்து கோடீஸ்வரரானான பிறகு, தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாரிசு இல்லையே என்ற இழப்பை உணர்கிறார். எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக நாயகனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை ஆக்சன் திரில்லருடன் விவரிக்கிறது 'மகான்' படத்தின் திரைக்கதை என்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து