முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் கோவில் மாசி திருவிழா நாளை தொடக்கம் : பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி

சனிக்கிழமை, 5 பெப்ரவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வருகிற 7-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மாசி திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெற உள்ளது.

விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவில் வளாகம், கடற்கரை, நாழிக்கிணறு பஸ்நிலையம், திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபங்களை பார்வையிட்டார். தொடர்ந்து தேர்கள் மற்றும் தேரோட்டம் நடைபெறும் வீதிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வருகிற 7-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. திருவிழாவிற்கு என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவில் பகுதி, திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் நேரில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

அதன்படி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செல்லும் வரிசை முறைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக ஒரே நேரத்தில் 100 நபர்கள் அமரக்கூடிய வகையில் அறை அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் முதலுதவி மையமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பக்தர்கள் கடலில் நீராடும்போது ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க கடலில் தடுப்பு மிதவைகள் அமைக்கப்படும். இந்த ஆண்டு மாசி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் வழக்கம்போல் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எல்லா நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து