முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 15-ம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் நேரடியாக வழங்க ஏற்பாடு

சனிக்கிழமை, 5 பெப்ரவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருப்பதி : கொரோனா பரவல் குறைந்து வருவதால், வரும் 15-ம்தேதி முதல் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 15-ம் தேதி முதல் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் ஜவகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த மாதம், பிப்ரவரி மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. 15-ம் தேதி வரை மட்டுமே ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்து வருவதால், வரும் 15-ம்தேதி முதல் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

திருப்பதியில் ஆகாச கங்கை அருகேயுள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் கோவில் விரிவாக்க பணிகளுக்காக வரும் 16-ம்தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது. கோவிலில் சிதலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்படும். அஞ்சனாத்ரி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மலைப்பாதைகள் சீரமைக்கப்படும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து