முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றி நடிக்கும் ஜோதி

ஞாயிற்றுக்கிழமை, 6 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

வெற்றி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஜோதி. இந்த படத்தின் டீசரை தாணு உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டனர். வெளியான சில நிமிடங்களிலேயே இந்த டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதன் மூலம் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா இயக்கியிருக்கும் இப்படத்தில் ஷீலா ராஜ்குமார், கிரிஷா குரூப், ‘நான் சரவணன் SP ராஜா சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செசி ஜெயா ஒளிப்பதிவு செய்ய, சத்ய மூர்த்தி படத்தொகுப்பை மேற்கொள்ள,  படத்துக்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்கிறார். கார்த்திக் நேத்தா வரிகளில் உருவாகியுள்ள பாடல்களை  K J ஜேசுதாஸ், பல்ராம், கார்த்திக், ஆர்த்தி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். SPR STUDIOS சார்பில் சதுரங்க வேட்டை படத்தொகுப்பாளர் SP ராஜா சேதுபதி இப்படத்தை தயாரித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!