முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூப்பர் ஹீரோவாக நடிக்கும் தோனி

ஞாயிற்றுக்கிழமை, 6 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரமேஷ் தமிழ்மணி எழுதிய அதர்வா தி ஆர்ஜின் என்ற கிராஃபிக் நாவலில் சூப்பர் ஹீரோவாகவும், போர் வீரர்களின் தலைவராகவும் தோனி நடிக்கிறார். விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள, இந்த கிராஃபிக் நாவலுக்கான மோஷன் போஸ்டரை, தோனி தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இந்த நாவலுக்காக 150 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த அனிமேஷன் காமிக்சில் தோனி ஒரு அகோரியாக நடிக்கிறார். அகோரியாக இருக்கும் தோனியை பிடித்து, ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சி செய்கிறார். அப்போது பண்டைய காலத்தில் அகோரியின் சக்தி, வரலாறு தோனியின் மூலம் வெளிப்படுகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பது தான் கதை. இந்த கிராஃபிக் நாவல் வெப் சீரிஸாக அமேசான் தளத்தில் வெளியாக உள்ளது. இதனை தோனி என்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பதாக, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தோனியின் மனைவியுமான சாக்ஷி கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!