முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் ரதசப்தமி விழா: 7 வாகனங்களில் பவனி வந்து எழுந்தருளிய ஏழுமலையான்!

செவ்வாய்க்கிழமை, 8 பெப்ரவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதியில் கடந்த 2 ஆண்டுகளாக ரதசப்தமி விழா கொரோனா தொற்று காரணமாக கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டு வருகிறது. விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவமான ரதசப்தமி விழா நேற்று அதிகாலை தொடங்கி நடந்தது. காலை சூரிய உதயம் தொடங்கி இரவு வரை ஏழுமலையான் அடுத்தடுத்து 7 வாகனங்களில் எழுதருளினார். கொரோனா விதிமுறை முன்னெச்சரிக்கையால் கோவிலுக்குள்ளேயே காட்சி தந்தார். கோவில் வளாகத்தில் உலா வந்தார். நேற்ரு காலை 6 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் அருள்பாலித்தார். 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சே‌ஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அம்ச வாகனத்திலும், 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்திலும் காட்சியளித்தார். ரதசப்தமி விழாவில் அர்ச்சகர்கள் தேவஸ்தான அதிகாரிகள் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர். ரதசப்தமி விழா அன்று மாடவீதிகளில் சாமி உலா வருவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மாட வீதியில் குவிவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக ரதசப்தமி விழா கொரோனா தொற்று காரணமாக கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டு வருகிறது. விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து