முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூர்மன் – விமர்சனம்

சனிக்கிழமை, 12 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

ராஜாஜி, ஜனனி ஐயர், பால சரவணன், ஆடுகளம் நரேன்  உள்ளிட்ட  பலரின் நடிப்பில் பிரையன் பி.ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் கூர்மன். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு சக்தி அரவிந்த், இசை டோனி பிரிட்டோ. கதை, ஒருவர் மனதில் உள்ளதை கண்டுபிடிக்கும் ஒரு பாத்திரத்தை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு திரைக்கதையை உருவாக்கி உள்ளார் இயக்குனர். கதை, ஒருவரது மனதில் என்ன நினைக்கிறார் என்பதை கண்டறிந்து அதன் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் திறமைசாலி போலீஸ் சப் இன்ஸ்பெக்ட்ர் ராஜாஜி. ரவுடி ஒருவன் தலையில் பலமாக தாக்கியதால் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளார் எனக்கூறி  போலீஸ் வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். மீண்டும் ராஜாஜி போலீஸ் அதிகாரியானாரா? குற்றவாளிக்கு என்ன தண்டனை கிடைத்தது என்பது தான் படத்தின் மீதி கதை. ஆக்சன், காதல் சோகம் என அனைத்து காட்சிகளிலும் அற்புதமாக நடித்திருக்கிறார். ராஜாஜி அடியாட்களுடன் மோதும் சண்டைக் காட்சிகள் எல்லாம் பரபரப்பாக இருக்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவும், இசையும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் கூர்மன்  ஒரு திரில்லர் விருந்து.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து