முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிபின் ராவத்தை அவமதித்த காங்கிரசுக்கு தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும்: உத்தராகாண்டில் பிரதமர் மோடி பிரச்சாரம்

சனிக்கிழமை, 12 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தை அவமானப்படுத்திய காங்கிரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் பதிலடி கொடுக்கவேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூரில் பா.ஜ.க. சார்பில் தேர்தல பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தோம். ஏழைகளுக்கு பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தில் வழங்கப்பட்ட இலவச ரேசன் பொருள் உள்ளிட்ட பல திட்டங்கள் வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்திருந்தால், தங்களுக்கு கிடைத்திருக்காது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

பெருந்தொற்று காலத்தில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையும் வெறும் வயிற்றுடன் உறங்க நாங்கள் அனுமதித்தது இல்லை. பெரிய சாலைகள், ரெயில், வான் போக்குவரத்து ஆகியவை ஏற்படுத்தி தரப்பட்டன. மருத்துவ மற்றும் கலைக்கல்லூரிகளை கட்டிக் கொடுத்துள்ளோம். கொரோனா தடுப்பூசிக்கு எதிராக காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்தது. தடுப்பூசி பணிகள் சரியாக நடந்தால், அரசிற்கு எதிராக எதுவும் பேச முடியாது என கருதி வதந்தி பரப்பியது. மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தை காங்கிரஸ் அவமதித்தது. அக்கட்சிக்கு வரும் தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும். இந்தியாவை ஒரு நாடாக கருத கூட காங்கிரஸ் மறுக்கிறது. தேவபூமி உத்தரகாண்டின் புனிதத்தன்மையை பா.ஜ.க. பாதுகாக்கும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து