முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமுருகன்பூண்டி பிரச்சாரத்தில் தடி ஊன்றி பங்கேற்ற 90 வயது தி.மு.க. மூத்த உறுப்பினருக்கு கவுரவம் அளித்த மார்க்சிஸ்ட் கட்சி

செவ்வாய்க்கிழமை, 15 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

திருமுருகன்பூண்டி நகராட்சியில் நடந்த பிரச்சாரத்தின் போது தடி ஊன்றி பங்கேற்ற 90 வயது தி.மு.க. மூத்த உறுப்பினருக்கு  கதர் ஆடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

திருமுருகன்பூண்டி நகராட்சியில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தி.மு.க. மூத்த உறுப்பினர் தடி ஊன்றி வந்து பங்கேற்றதால் அனைவரும் மகிழ்ந்தனர். அவருக்கு கதர் ஆடை அணிவித்து கவுரவம் அளிக்கப்பட்டது. 

திருமுருகன்பூண்டி நகராட்சியில் தி.மு.க. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இராக்கியாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து சட்டப் பேரவைத் தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வென்று, தி.மு.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து 9 மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மகத்தான வெற்றி பெற்றது தி.மு.க. கூட்டணி.

ஆட்சி பொறுப் பேற்று 8 மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 10ஆண்டுகால ஆட்சியில் அ.தி.மு.க. அடித்த கொள்ளைக்கு அளவில்லை. இதை அறப்போர் இயக்கம் என்ற சமூக அமைப்பு கூறியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் தண்டிக்கப்படுவார்கள்.  ஆகவே மக்கள் தி.மு.க. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். 

பிரச்சாரம் துவங்கும் முன் 90 வயதுக்கு மேற்பட்ட தி.மு.க.வை சேர்ந்த மூத்த உறுப்பினர் அருணாசலம் தடி ஊன்றி வந்து பங்கேற்றார். அவருக்கு கதர் ஆடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து