முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல பாலிவுட் பாடகர்- இசையமைப்பாளர் பப்பி லஹிரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

புதன்கிழமை, 16 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

பிரபல பாலிவுட் பாடகர்- இசையமைப்பாளர்  பப்பி லஹிரியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாலிவுட் திரையுலகமும் இரங்கல் தெரிவித்து வருகிறது.

பாலிவுட் திரையுலகில் 70-80களில் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடியவர் பிரபல பாடகர் பப்பி லஹிரி (69). படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 1980-90ம் ஆண்டுகளில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்தியவர். இவர் கடைசியாக 2020-ம் ஆண்டில் வெளிவந்த பாகி3 படத்திற்காக 'பங்காஸ்' என்ற பாடலை பாடினார். பாடகர் என்ற அடையாளத்தை தவிர, அதிர்ஷ்டத்திற்காக அவர் கழுத்தில் அணியும் தங்க சங்கிலிகளும், கண்ணாடியும் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பப்பி லஹிரி பல்வேறு உடல்நலப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனால் ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர் கடந்த திங்கட்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பப்பி லஹிரிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பப்பி லஹிரி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பாடகர் பப்பி லஹிரியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- பாடகர் பப்பி லஹிரியின் இசை அனைத்தையும் உள்ளடக்கியது. பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுபத்தியது. மக்கள் அவரது படைப்புகள் மூலம் தலைமுறை தலைமுறையாக தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து