முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ஒரேநாளில் ரூ.376 உயர்வு

வியாழக்கிழமை, 17 பெப்ரவரி 2022      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,680-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,663 ஆக இருந்தது. நேற்று இது ரூ.4,710 ஆக அதிகரித்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.37,304-ல் இருந்து 37,680 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் தங்கம் விலை கிராம் 47 ரூபாயும் பவுன் 376 ரூபாயும் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை கிராம் ரூ.67.90-ல் இருந்து 68 ரூபாயாகவும், கிலோ ரூ.67,900-ல் இருந்து ரூ.68 ஆயிரமாகவும் உயர்ந்து விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து