முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சியின் கொள்கைக்கு முரணான வகையில் நடந்த திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு

வியாழக்கிழமை, 17 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் நடந்ததாக திருப்பூர் மாவட்டநிர்வாகிகளை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கான ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பில், 

கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்திலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுகின்ற காரணத்தாலும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் டி.ஏ. சுரேஷ், திருப்பூர் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த திருப்பூர் மாநகராட்சி 42-வது வட்டம் ஜெயபாண்டி, திருப்பூர் மாநகராட்சி 10-வது வட்டம் பிரேமலதா, 22-வது வட்ட செயலாளர் காட்டன் எம். குமார் ஆகியோர் இன்று(நேற்று) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் விடுத்துள்ள மற்றொரு அறிவிப்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், தி.மு.க. வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தேர்தல் பணியாற்றுகின்ற காரணத்தினால் திருப்பூர் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த வேலம்பாளையம் பகுதி துணை செயலாளர் கோட்டா பாலு (எ) பாலசுப்பிரமணியம், தொட்டிபாளையம் பகுதி பொருளாளர் ஜெகநாதன், 5-வது வட்ட செயலாளர் மனோகரன், திருப்பூர் மாநகராட்சி 42-வது வட்டம் வாசுமலை, என். வேலுச்சாமி ஆகியோர் இன்று(நேற்று) முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து