முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் வன்முறையை உருவாக்க குண்டர்கள் திட்டம்: இ.பி.எஸ். குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 18 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

கோவையில் வெளியூரை சேர்ந்தவர்கள் வன்முறையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி குண்டர்களை வெளியேற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவியிடங்களுக்கு 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.  

இந்த நிலையில், நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் போலீஸ் துணையுடன் அனைத்து வார்டுகளிலும் பண விநியோகம் நடப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் கோவையில் போலீஸ் துணையுடன் அனைத்து வார்டுகளிலும் பண விநியோகம் நடக்கிறது. தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.  அ.தி.மு.க.வின் கோட்டையான கோவையில் தி.மு.க. இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது. மக்களிடம்  தி.மு.க. செல்வாக்கை இழந்துள்ளது. அ.தி.மு.க.வினர் மீது தி.மு.க. அரசு பொய் வழக்கு போடுகிறது. வெளியூரை சேர்ந்தவர்கள் இங்கேயே தங்கி வன்முறையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி குண்டர்களை வெளியேற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து