முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: சூர்யா, கார்த்தி வாக்களித்தனர்

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

நடிகர் சூர்யாவும், அவரது சகோதரரான நடிகர் கார்த்தியும் தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என மொத்தம் 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்த நிலையில், திரை உலகின் முன்னனி நட்சத்திரங்களாக வலம் வரும் நடிகர் சூர்யாவும், அவரது சகோதரரான நடிகர் கார்த்தியும் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். அவர்கள் இருவரும் சென்னை  தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு பிற்பகல் வேளையில் வந்து வாக்களித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து