முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் ரைட்டர் படம்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் வெளியான படம் ரைட்டர். இப்படத்தில் சமுத்திரக்கனி, ஹரிக்கிருஷ்ணன், கவிதா பாரதி உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தனர். காவல்துறையில் நிலவும் சாதி அடக்கு முறைகளையும் காவலர்களின் ’ரைட்ஸ்’களையும் தொய்வில்லாத திரைக்கதையால் அழுத்தமாகப் பேசி தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப். இந்த நிலையில், ‘ரைட்டர்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை தெலுங்கின் முன்னணி ஓடிடி தளமான ’ஆஹா’ கைப்பற்றியுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸும் மை ஹோம் நிறுவனமும் இணைந்து நடத்திவரும்‘ஆஹா’ ஓடிடி தளம் தற்போது தமிழிலும் வந்துள்ளது. இந்த ஓடிடி தளத்தில் ரைட்டர்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து