முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரை விமர்சனம்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

தூங்காவனம், கடாரம்கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா, தற்போது இரை என்ற இணையத்தொடரை இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கும் இந்த தொடரில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சசி கலை இயக்கம் செய்ய. சில்வா மாஸ்டர் சண்டைப் பயிற்சிகளையும், ஷான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளையும் செய்துள்ளனர். இரை, ஆஹா ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறதை ஒட்டி , நடிகை ராதிகா, சரத்குமார் உள்ளிட்டோர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது ராதிகா பேசுகையில், ஆஹாவில் ஒரு க்ரைம் தொடர். தமிழில் இது போல் வந்திருக்காது என்பதை உறுதியாக சொல்கிறேன் என்றார். மேலும், சரத்குமார், இரையில் ஒரு ஹீரோவாக இல்லாமல் பாத்திரமாக நடித்துள்ளார். அவருக்கு உடல்நலம் குன்றிய ஒரு நேரத்தில் அருமையாக நடித்து கொடுத்தார். இரை எல்லோரும் பிடிக்கும். நன்றி. என்று கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து