முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலுர் நகராட்சி 9-வது வார்டில் வெற்றி பெற்ற பின் தி.மு.க.வில் இணைந்த அதிமுக வேட்பாளர்!

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

மதுரை மேலுர் நகராட்சி 9-வது வார்டில் வென்ற அதிமுகவின் அருண் சுந்தர பிரபு திமுகவில் இணைந்தார்.

தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றியை பதிவு செய்து வரும் நிலையில், மதுரை மேலூர் நகராட்சி 9-வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க வேட்பாளர் அருண் சுந்தர பிரபு வெற்றிக்குப் பின்பு அமைச்சர் மூர்த்தி முன்னிலையில்  தி.மு.கவில் இணைந்தார். இது அ.தி.மு.க.வினரிடையே சலசலைப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து