முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 25 ஆண்டுகளுக்கான சிறப்பான அடித்தளத்தை பா.ஜ.க. அமைத்துள்ளது: மணிப்பூரில் பிரதமர் மோடி பிரசாரம்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

மணிப்பூர் மாநிலத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான சிறப்பான அடித்தளத்தை பாஜக அமைத்து கொடுத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

மணிப்பூர் மாநிலம் ஹீங்காங்கில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த மாதம் மணிப்பூர் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. கடந்த பல ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலம் பல அரசாங்கங்களை கண்டுள்ளது. பல வருடங்கள் காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு, மணிப்பூரில் சமத்துவமின்மை மட்டுமே இருந்தது.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில், பாஜகவின் இரட்டை இயந்திர அரசு, மணிப்பூரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி உழைத்தது. பாஜகவின் நல்லாட்சியையும், நல்ல நோக்கத்தையும் பார்த்திருப்பீர்கள். கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவின் நல்லாட்சியால், அடுத்த 25 ஆண்டுகளுக்கான சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளது.

மணிப்பூரின் அடுத்த 25 ஆண்டுகளை இப்போது நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் தீர்மானிக்கும். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசால் மாநிலத்தில் ஏற்படுத்தப்பட் நிலைத்தன்மை மற்றும் அமைதி ஆகியவற்றை நீடித்து நிலைக்க செய்ய வேண்டும். அதற்கு முழு பெரும்பான்மை பெற்ற பாஜக அரசு அமைய வேண்டியது அவசியம். பாஜக அரசு செய்து காட்ட இயலாத விஷயங்களை செய்து காட்டியுள்ளது. 

 

காங்கிரஸ் கட்சி மணிப்பூரின் முன்னேற்றத்துக்கான விஷயங்களில் எப்போதும் கவனம் செலுத்தியதில்லை. ஆனால், நாங்கள் சென்னதை செய்தோம். மியான்மர்- தாய்லாந்து இடையேயான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டவுடன், மணிப்பூர் கிழக்கு ஆசியாவின் முக்கிய பகுதியாக உருவெடுக்கும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து