முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் பா.ஜ.கவின் வெற்றியை உறுதிசெய்வர்: உ.பி.யில் பிரதமர் மோடி பிரசாரம்

புதன்கிழமை, 23 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

இலவச தடுப்பூசிகளைப் பெற்ற 28 கோடி பேர் பா.ஜ.கவின் வெற்றியை உறுதிசெய்வர் என்று உ.பி.க்கான 5-வது கட்ட சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ம் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும் சேர்த்து 61.20 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 3-வது கட்டமாக கடந்த 19ம் தேதி 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

இந்நிலையில், 59 தொகுதிகளுக்கான 4-வது கட்ட தேர்தல் நேற்று நடந்தது. 5-ம் கட்ட தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாராபங்கி பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-    

உ.பி.யின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சிக்கும் இந்தத் தேர்தல் அவசியம். நாட்டின் மொத்தப் பரப்பளவில் உ.பி.,யின் பரப்பளவு 7 சதவீதமாக இருக்கலாம். ஆனால், அதன் மக்கள் தொகையைப் பார்த்தால் அது இந்தியாவின் மக்கள்தொகையில் 16 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இலவச தடுப்பூசிகளைப் பெற்ற 28 கோடி மக்கள் பாஜகவின் வெற்றியை உறுதி செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து