முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது: ஓ. பன்னீர் செல்வம் கண்டனம்

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது கடந்த பத்து மாத கால தி.மு.க. ஆட்சியில் கொடிகட்டி பறக்கிறது. கள்ள ஓட்டு போட முயன்ற தி.மு.க.வைச் சேர்ந்தவரை கையும், களவுமாக பிடித்துக் கொடுத்தார் என்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பல பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளார். அதனை அவர் சட்ட ரீதியாக சந்தித்து வருகிறார். இந்தச் சூழ்நிலையில், ஜெயக்குமார் மீது தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட பல பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  இதன்மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சி வெட்ட வெளிச்சமாகி விட்டதும், காவல் துறையினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதும் அம்பலமாகி விட்டது.  

ஒமைக்ரான் தொற்று நோயின் பாதிப்பு இறங்குமுகத்தில் இருக்கின்ற சூழ்நிலையில், இதனையட்டி, அரசே பல தளர்வுகளை அறிவித்து அவைகள் எல்லாம் நடைமுறைக்கு வந்து விட்ட சூழ்நிலையில், தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதை பார்க்கும்போது தி.மு.க. அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி வெளிப்படுகிறது.  இது தி.மு.க. அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.  இது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல்.  

இதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப அதிகாரத்தை பயன்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து