முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகா சிவராத்திரி: இன்று சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

விருதுநகர் : மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று (28-ம் தேதி) முதல் மார்ச் 3-ம் தேதி வரை சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில், மதுரை - விருதுநகர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு உள்ள சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில்களில் பிரதோஷம், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அதையொட்டியுள்ள 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில், பிரதோஷம் மற்றும் மார்ச் 1-ம் தேதி மகா சிவராத்திரி விழாவையொட்டி இன்று (28-ம் தேதி) முதல் மார்ச் 3 வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல வனத்துறையும், கோயில் நிர்வாகமும் அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் நீரோடைகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து