முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமீரின் இறைவன் மிகப்பெரியவன்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

இயக்குனர் வெற்றிமாறன், எழுத்தாளர் தங்கம் இருவரும் இணைந்து கதை, வசனத்தை எழுத, அமீர் இயக்கும் திரைப்படத்திற்கு இறைவன் மிகப் பெரியவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பருத்திவீரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராம்ஜி இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். அமீர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ஆதி பகவான். 2013-ல் இந்தப் படம் வெளியானது. ஒன்பது வருட இடைவெளிக்குப் பிறகு இறைவன் மிகப் பெரியவன் என்ற இந்த திரைப்படத்தை இயக்குகிறார். படத்தில் முக்கிய ரோலில் கரு.பழனியப்பன் நடிக்க உள்ளார். சமீபத்தில் இதன் டைட்டில் லுக்  போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து