முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொல்லாப்பு இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

தீக்குச்சி திரைப்படம் மூலம் 2007ல் நாயகனாக அறிமுகமானவர் தேவன். தற்போது இவரே நாயகனாக நடித்து ஐந்து மொழிகளில் எடுத்துள்ள படம் தான் பொல்லாப்பு. படத்துக்கு ஜான்சன் இசையமைக்க, ஒளிப்பதிவை திருப்பதி மேற்கொள்கிறார். நாயகன் தேவனுடன் ரித்திகா, ஹர்சா ஆகியோர் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் நாயகனும் இயக்குநருமான தேவன் பேசுகையில், பொல்லாப்பு என்றால் எல்லோரும் விலகி ஓடுவார்கள். ஆனால் காவல்துறை மட்டும்தான் தேடிச் சென்று பிரச்சினையை தீர்க்கும்  என்பதுதான் பொல்லாப்பு படத்தின் கதை என்றார். மேலும், மது, புகை  ஆகியவற்றினால் இளைஞர் சீரழியக்கூடாது என்கிற கருத்தையும் சொல்லி இருக்கிறேன்” என்றார். “பொல்லாப்பு படத்தில் முதலில் அபிநயஸ்ரீயை ஒப்பந்தம் செய்தேன். ஆனால் பட பூஜை நெருங்கும் நேரத்தில்  காஸ்ட்யூமை எடுத்துக்கொண்டு சென்றவர் வரவே இல்லை. அவரால் படப்படிப்பு தடைபட்டது. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து