முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குநர் பாலா தயாரிக்கும் விசித்திரன்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

இயக்குநர் பாலா தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. மலையாளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஜோசப் படத்தினை ஆர்.கே சுரேஷ் நடிப்பில் இயக்குநர் பாலா ரீமேக் செய்துள்ளார், மலையாளத்தில் பாராட்டுகளும் வெற்றியையும் குவித்த இந்தக் க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கிய எம்.பத்மகுமாரே தமிழிலும் 'விசித்திரன்' என்ற பெயரில் இயக்கி இருக்கிறார். ஜோஜு ஜார்ஜ் கதாபாத்திரத்தில் தமிழில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே சுரேஷ், இயக்குநர் பத்மகுமார், தயாரிப்பாளர் பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் பாலா, இந்தப் படத்தை ரீமேக் பண்ணலாம் என்றபோது, சுரேஷ் ’நான் பண்றேன் அண்ணா’ என்றார். அப்போது அதே இயக்குநரை அழைப்போம் என முடிவு செய்து அவரை கூப்பிட்டு நீங்கள் அங்கே செய்ய முடியாததை, பணம் பற்றி கவலை இல்லாமல் இங்கே பண்ணுங்கள் என்றேன். அவரும் மலையாள படத்தை விட இந்தப்படத்தை அழகாக எடுத்துள்ளார். இந்தப்படம் மூலம் சுரேஷுக்கு நல்ல மரியாதை கிடைக்கும். அதை, சுரேஷ் காப்பாற்றி கொள்ள வேண்டும்” என்று அறிவுரை கூறினார் பாலா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து