முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் சத்யா நடிக்கும் ரஜினி

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது "ரஜினி என்ற திரைப்படம்"  A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்குகிறார். விஜய் சத்யா  கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக்  உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துதுள்ளார். பாடல்களை  நெல்லை ஜெயந்தன், லாவர்தன் இருவரும் எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் A.வெங்கடேஷ் கூறுகையில், திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான  படமாக இதை உருவாக்கி உள்ளேன். படத்துக்கு ரஜினி என்று பெயர் வைத்தவுடன் நிறைய பேர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதையா என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இது அவருடைய கதை இல்லை நாயாகன் தீவிர ரஜினி ரசிகராக வருகிறார். அதனால் தான் படத்திற்கு ரஜினி என்று தலைப்பை வைத்துள்ளோம் என்றார். இப்படத்தை வி.பழனிவேல் தயாரிக்கிறார். இந்த தயாரிப்பாளருடன் 13 வருடங்களுக்கு முன்பு அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி அது மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இம்மாதம் வெளியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து