முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்ச் 4 ல் வெளியாகும் தி பேட்மேன்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

Batman என்கிற  ஹாலிவுட் திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 4 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஹிந்தி  ஆகிய 4 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் குறித்து இயக்குனர் Matt Reeves கூறுகையில், புத்தம் புதிய கதைக்களம் உருவாக்கப்பட்டு மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள படம் தான் இந்த The Batman என்றார். முந்தைய Batman படங்களுக்கெல்லாம் மணிமகுடமாக உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். Robert Pattinson இப்படத்தில் Batman ஆக நடித்துள்ளார் என்றார். பின்னர் படத்தின் நாயகன் Robert Pattinson பேசுகையில், Batman உடையை மாட்டிக்கொண்டு நடித்தது மிகப் பெரிய சவாலாக இருந்தது. நடிப்பதை விட இந்த உடையை அனிந்த பின்னர் நடப்பது கூட சிரமமாகவே இருந்தது என்றார். மேலும், இயக்குனர் சொன்னது போன்ற முகபாவங்களை வெளிக்காட்டி நடிப்பதென்பதும் நிச்சயம் ஒரு சவாலாக இருந்தது என்றார். Zoë Kravitz, Paul Dano, Jeffrey Wright, John Turturro, Peter Sarsgaard as Gotham D.A. Gil Colson; Jayme Lawson  Andy Serkis மற்றும் Colin Farrell ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து