முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கு நமது நாட்டின் வலிமைதான் காரணம்: உ.பி.யில் பிரதமர் மோடி பிரசாரம்

புதன்கிழமை, 2 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதால் தான் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை நாம் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வர முடிகிறது என மோடி தெரிவித்துள்ளார்

உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 5 கட்ட தேர்தல் முடிந்தநிலையில், இன்று 6-வது கட்ட தேர்தல் நடக்கிறது. 10 மாவட்டங்களில் அடங்கிய 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. அந்த தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 

இந்த நிலையில் 7-வது கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது., 

'ஆத்மநிர்பர் அபியானை' கேலி செய்யும் மக்கள், நமது (பாதுகாப்பு) படைகளை அவமதிக்கிறார்கள்-  இவர்களை போன்ற வாரிசு அரசியல் செய்பவர்கள் ஒருபோதும் இந்திய நாட்டை வலிமையாக்க முடியாது.  அவர்கள் தான் கொரோனா தடுப்பூசிகளை பற்றிய வதந்திகளை பரப்பியவர்கள். 

ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் உக்ரைனில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். உக்ரைன் நாட்டில் இருந்து நாம் 1000 இந்தியர்களுக்கு மேல் மீட்டு கொண்டு வந்துள்ளோம். இந்த பணியை விரைவுபடுத்துவதற்காக 4 மத்திய மந்திரிகளை உக்ரைன் நாட்டின் அண்டை நாட்டிற்கு நாம் அனுப்பியுள்ளோம். 

இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதால் தான்  உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நம் நாட்டினரை நாம் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வர முடிகிறது.இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதில் எந்த ஒரு வழியையும் விட்டுவைக்க போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து