முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரேநாளில் ரூ.616 அதிகரிப்பு: ஒரு சவரன் தங்கம் விலை ரூ.39 ஆயிரத்தை எட்டியது

புதன்கிழமை, 2 மார்ச் 2022      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் தங்கம் விலையானது நேற்று மூன்றாவது நாளாக விலை அதிகரித்துள்ளது. தங்கம் விலை நேற்று ஒரேநாளில் சவரன் ஒன்றுக்கு ரூ.616 அதிகரித்தது.

ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. கடந்த 22-ம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ம் தேதி ரூ.39 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.616 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் ரூ.4,875-க்கும் ஒரு சவரன் ரூ.39000-க்கு விற்பனையானது. சென்னையில் சில்லரை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.1.10 உயர்ந்து ரூ.71.90-க்கு விற்பனையானது.

தங்கம் விலை விவரம்:

  •  1 கிராம் தங்கம் -ரூ.4,875.
  •  1 பவுன் தங்கம் - ரூ.39,000.
  •  1 கிராம் வெள்ளி - ரூ.71.90.
  •  1 கிலோ வெள்ளி - ரூ. 71,900.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து