முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனில் உள்ள 2 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷ்யா

சனிக்கிழமை, 5 மார்ச் 2022      உலகம்
Image Unavailable

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்த 2-ம் கட்ட பேச்சு வார்த்தையின்படி 2 நகரங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ தளவாடங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை குறி வைத்து தாக்கினர். பின்னர் தலைநகர் கிவ் உள்பட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் தொடங்கியது.  

ரஷ்யாவின் ஆக்ரோ‌ஷமான தாக்குதலால் உக்ரைன் மக்கள் கடும் பீதி அடைந்தனர். அவர்கள் மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதைகள், வீடுகளின் அடிப்பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர்.  உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயன்று வருகிறார்கள். அவர்கள் எல்லையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து நடக்கும் சண்டையால் உக்ரைனில் சிக்கியிருக்கும் மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்பதில் சிக்கல்கள் இருப்பதால் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் ரஷ்யா நேற்று உக்ரைனில் 2 நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக அறிவித்தது. உக்ரைன் மீதான போர் மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்கள் வெளியேறுவதற்கான மீட்பு பணிகளுக்காக போர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் மற்றும் கிழக்கில் உள்ள வோல் னோவாகா ஆகிய 2 நகரங்களில் இன்று(நேற்று) முதல் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. அந்நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியேறும் பாதைகள் அமைப்பதற்கு உக்ரைனுடன் ஒப்புக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த போர் நிறுத்தம் நேற்று பகல் 11 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்த 2-ம் கட்ட பேச்சு வார்த்தையின்படி இந்த 2 நகரங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த 2 நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து