முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய மாணவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் வெளியேற உக்ரைனில் 2 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷ்யப் படைகள் அறிவிப்பு

சனிக்கிழமை, 5 மார்ச் 2022      உலகம்
Image Unavailable

உக்ரைனில் மரியுபோல், வொல்னோவாகா நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யப் படைகள் அறிவித்துள்ளதை அடுத்து அங்கிருந்து வெளிநாட்டவர் உள்ளிட்ட மக்கள் பயமின்றி வெளியேறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை 10-வது நாளாக நேற்று ரஷ்யா தொடர்ந்தது. ரஷ்ய தாக்குதலில் ஒவ்வொரு நாளும் உக்ரைன் நிறைய இழப்புகளை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் ரஷ்ய அணுமின் நிலையத்தை ரஷ்யா தனது கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் நேற்று, மரியுபோல் என்ற துறைமுக நகரத்தை சுற்றி வளைத்துள்ளது. இதனை அந்த நகரின் மேயர் உறுதி செய்துள்ளார். தலைநகர் கீவ் உள்ளிட்ட பெருநகரங்களில் மீதான தாக்குதல் தீவிரமாகத் தொடர்கிறது.

மரியுபோல் நகருக்கான குடிநீர், உணவு, மின்சார விநியோகம் முடக்கிவைக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் தற்போது மைனஸ் 4 டிகிரி அளவில் குளிர்நிலை உள்ளது. இந்தக் கடுங்குளிர் சூழலில் மின் தடையால் ஹீட்டிங் முறைகளும் முடங்கியுள்ளன.

அஸோவ் கடற்கரையில் உள்ள மரியுபோல் நகரில் 4 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் உள்ளனர். இந்த நகரை ரஷ்யப் படைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால், உக்ரைனுக்கு கடல்வழியாகக் கிடைக்கும் உதவிகள் தடைபடும். மேலும் க்ரீமியா, டான்பாஸில் இருந்து தடையின்றி ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் வரும்.

மரியுபோலைக் கைப்பற்றியுள்ள ரஷ்யப் படைகள், ரஷ்ய நேரப்படி 10 மணியளவில் தொடங்கி குறிப்பிட்ட சில மணி நேரம் வரை தாக்குதல் நடத்தப்படாது என்றும், அதைப் பயன்படுத்தி மரியுபோல், வொல்னோவாகா பகுதிகளில் இருக்கும் மக்கள் வெளியேறலாம் என்று ரஷ்ய ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் மற்றும் கிழக்கில் உள்ள வொல்னோவாகா ஆகிய 2 நகரங்களில் நேற்று முதல் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. அந்நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியேறும் பாதைகள் அமைப்பதற்கு உக்ரைனுடன் ஒப்புக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த போர் நிறுத்தம் நேற்று பகல் 11 மணி முதல் அமலுக்கு வந்தது.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த 2 நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

முன்னதாக ரஷ்யப் படைகள் ஜேப்பரோஜியாவில் உள்ள அணுமின் நிலையத்தைக் கைப்பற்றியது. இதனால் அடுத்த நகர்வாக ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன், ரஷ்யாவின் ராணுவ அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நிலைமை இவ்வாறாக இருக்க, பெலாரஸில் இந்த வார இறுதியில் ரஷ்யாவுடன் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. வான்வழி, தரைவழி தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் மீது இணையத் தாக்குதலும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் இணைய சேவை முடங்கியுள்ளது. உக்ரைன் இணையச் சேவைகளை ரஷ்யா முடக்கி வரும் சூழலில் அது ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலிப்பதாகத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து