முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய படை தாக்குதலில் இதுவரை 1,000 உக்ரைன் மக்கள் உயிரிழப்பு : ஐ.நா. சபை தகவலால் அதிர்ச்சி

சனிக்கிழமை, 5 மார்ச் 2022      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெனீவா : ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில் உக்ரைனில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமை குறித்து விவாதிக்கப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசி உக்ரைன் நிலைகளை அழித்தது. முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி உள்ளது. அதேநேரத்தில் பிற நாடுகளின் ராணுவ தளவாடங்களின் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை உக்ரைன் நாட்டை சேர்ந்த 1000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தகவலை ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில் உக்ரைனில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமை குறித்து விவாதிக்கப்படுகிறது. அதேநேரத்தில் தாங்கள் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்று விட்டதாக உக்ரைன் அரசாங்கம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக உக்ரைன் ராணுவம் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது.,

ரஷ்ய படைகளின் 251 டாங்கிகள், 939 கவச வாகனங்கள், 105 பீரங்கி அமைப்புகள், 18 விமான எதிர்ப்பு போர் அமைப்புகள், 33 விமானங்கள், 37 ஹெலிகாப்டர்கள், 404 வாகனங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. 9,166 ரஷ்ய படை வீரர்கள் இந்த போரில் கொல்லப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து