முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் பயணமாக தூத்துக்குடி, குமரி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை

சனிக்கிழமை, 5 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

2 நாள் பயணமாக இன்று தூத்துகுடி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (7-ம் தேதி) குமரி மாவட்டம் செல்கிறார். 2 மாவட்டங்களில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக தூத்துக்குடி வந்து சேருகிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இரவு தூத்துக்குடியில் ஓய்வெடுக்கிறார். நாளை காலை தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மதியம் அங்கிருந்து புறப்பட்டு கார் மூலமாக குமரி மாவட்டம் வருகிறார். மாலை 4 மணிக்கு நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலை பணிகளை ஆய்வு செய்கிறார்.

இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பேயன்குழியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ள மழை சேத சீரமைப்பு பணிகளை பார்வையிடுகிறார். மாலை 5 மணிக்கு குமார கோவில் பகுதியில் மழை சேத சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக மதுரை செல்கிறார்.

மதுரையில் இருந்து விமானம் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவே சென்னை செல்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை குமரி மாவட்டம் வருகையை அடுத்து அவரை வரவேற்க மாவட்ட நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சி உள்பட 4 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. மேலும் பல்வேறு பேரூராட்சிளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகை தருவது தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் குமரி வருகையையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தென்மண்டல ஐ.ஜி. அன்பு நேற்று குமரி மாவட்டம் வந்தார். குமரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணனுடன் ஆலோசனை மேற் கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து