முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டே வாரத்தில் உக்ரைனை பிடிக்க திட்டமிட்ட ரஷ்யப்படை : ரகசிய ஆவணத் தகவலால் அதிர்ச்சி

சனிக்கிழமை, 5 மார்ச் 2022      உலகம்
Image Unavailable

Source: provided

கீவ் : 15 நாட்களுக்குள் உக்ரைன் முழுவதையும் பிடிக்க ரஷ்யா திட்டமிட்டிருந்தது ரகசிய ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நேற்று 10வது நாளாக போர் தொடுத்தது. கெர்சன் நகரை கைப்பற்றி ரஷ்ய படைகளுக்கு தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷ்யாவின் படைகளுக்கும் துப்பாக்கி சண்டை நடக்கிறது. உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

அதேவேளை, மீட்பு பணிக்காக உக்ரைனின் 2 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுப்பது தொடர்பாக ரஷ்யாவின் திட்டங்கள் எப்போது ஒப்புதல் வழங்கப்பட்டது என்ற தகவல் ரகசிய ஆவணங்கள் மூலம் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கான திட்டங்கள் ஜனவரி 18 அன்று அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி 20 முதல் மார்ச் 6-ம்தேதி வரை 15 நாட்களுக்குள் உக்ரைனை பிடிக்கும் திட்டம்  நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ரஷ்யாவின் ரகசிய போர் ஆவணம் ஒன்றில் கூறப்பட்டு உள்ளது. உக்ரைனை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் உக்ரைனில், ரஷ்யா இனப்படுகொலை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை முன்வைத்தும், ரஷ்யாவின் போர் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் எனக்கூறியும் உக்ரைன் சார்பில் சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா, ரஷ்யாவை கடுமையாக விமர்சித்துள்ளார். ரஷ்யா தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபடுவதாக அவர் கூறியுள்ளார். அதாவது ரஷ்யாவின் படை வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரங்களில் வசிக்கும் பெண்களிடம் அத்துமீறி பலாத்காரம் செய்வதாக கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், நாட்டில் உள்ள நகரங்களில் குண்டுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டு வருகிறது. தங்களது கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் ரஷ்ய ராணுவ வீரர்கள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக பல புகார்கள் உள்ளன. இது துரதிர்ஷ்டவசமானது. இவர்கள் அனைவரும் நீதித்துறையின் முன் நிறுத்தப்படுவார்கள். தாய்நாட்டை காக்க எங்களை விட பலமாக உள்ளவர்களிடம் மோதி வருகிறோம். சர்வதேச சட்டம் எங்கள் பக்கம் தான் உள்ளது. இது எங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும்'' என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து