முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் மீதான போர்: ரஷ்யாவில் விசா, மாஸ்டர் கார்டு சேவைகள் நிறுத்தி வைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2022      உலகம்
Image Unavailable

Source: provided

சான் பிரான்சிஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால், ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்கள் தனது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 10 நாட்களாகி விட்டன. இந்த 10 நாட்களில் அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி ரஷ்யா உருக்குலைய செய்து வருகிறது.  அதே நேரத்தில் உக்ரைனும், ஈடுகொடுத்து போராடி வருகிறது. 

இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் பரிவர்த்தனைகள் துண்டிக்கப்படும் என்று விசா நிறுவனம் கூறியதுடன், விசா கார்டுகள் தடை செய்யப்பட்டவுடன் ரஷ்யாவில் வழங்கப்பட்ட கார்டுகள் வெளிநாட்டில் வேலை செய்யாது என்றும், வெளிநாட்டில் வழங்கப்பட்ட கார்டுகள் ரஷ்யாவிற்குள் வேலை செய்யாது என்றும் அறிவித்துள்ளது.

இது குறித்து, விசா தலைமை நிர்வாக அதிகாரி அல் கெல்லி தனது அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் இருப்பதைத் தொடர்ந்து நாங்கள் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். 

இதே போல் மாஸ்டர்கார்டு நிறுவனமும், உக்ரைன் மீதான ரஷ்யப் போரை அதிர்ச்சியூட்டும் மற்றும் பேரழிவு தரக்கூடியது என்று கூறியதுடன் மாஸ்டர்கார்டின் தடை விசாவைப் போலவே இருக்கும் என அறிவித்தது. இதுகுறித்து மாஸ்டர்கார்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ரஷ்யாவின் இந்தச் செயலின் மூலம், ரஷ்ய வங்கிகளால் வழங்கப்படும் கார்டுகள் இனி மாஸ்டர்கார்டு நெட்வொர்க்கால் ஆதரிக்கப்படாது. மேலும், நாட்டிற்கு வெளியே வழங்கப்படும் எந்த மாஸ்டர்கார்டும் ரஷ்ய வணிகர்கள் அல்லது ஏ.டி.எம்.களில் வேலை செய்யாது என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து