முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமாதான பேச்சுக்கு முயற்சி: இஸ்ரேல் பிரதமர் ரஷ்ய அதிபருடன் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2022      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மாஸ்கோவில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் சந்தித்து பேசினார். 

முன்னதாக ரஷ்யா-உக்ரைன் போரைத் தீர்ப்பதற்கான முதல் இரண்டு சுற்றுப் பேச்சுக்கள் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, இருப்பினும் இரு தரப்பினரும் மீண்டும் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளனர். 

அதன்படி இன்று திங்களன்று மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர் டேவிட் அராகாமியா தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைன் தாக்குதல் குறித்து இரு நாடுகளுக்கிடையேயான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வலுசேர்க்கும் விதமாக இஸ்ரேல் பிரதமர்  ரஷ்ய அதிபரை சந்தித்து பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து