முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹே சினாமிகா - விமர்சனம்

திங்கட்கிழமை, 7 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் முதன்முறையாக இயக்கியுள்ள படம் ஹே சினாமிகா. படத்தில் நாயகனாக துல்கர் சல்மான்,  நாயகியாக அதிதி ராவும் நடிக்க  காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். பாடலாசிரியர் மதன் கார்க்கி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் மற்றும்  ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. கதை, யாழனும், மௌனாவும் சந்திக்கும் முதல் பார்வையிலேயே காதல் நெருப்பு பற்றிக்கொள்கிறது. மண வாழ்கை நன்றாக செல்ல ஒரு கட்டத்தில்  யாழனை மௌனாவுக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. ஏன், எதற்கு.. பிறகு என்ன நடந்தது என்பதே மீதிக் கதை. யாழனாக துல்கர் சல்மான் அதிகம் பேசும் துறுதுறு இளைஞர் வேடம். மௌனாவாக அதிதி ராவ் ஹைதாரி இயல்பாக நடித்திருக்கிறார். சிறு சிறு முகபாவங்களில்கூட ஈர்க்கிறார். மருத்துவர் மலர்விழியாக காஜல் அகர்வால் வருகிறார். கிட்டதட்ட வில்லி கதாபாத்திரம்.  மதன் கார்க்கியின் வசனங்கள் சிறப்பாக உள்ளன. கோவிந்த் வசந்தாவின் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு. பிருந்தா நடன இயக்குநராக பணி புரிந்த நீண்டகால அனுவத்தால் சிறப்பாகவே இப்படத்தை இயக்கி இருக்கிறார். யோகி பாபு வரும் காட்சி படத்துக்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது. சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் விவாகரத்து வரை போக வேண்டாம் என்கிற மெசேஜை கொடுத்துள்ள இயக்குநர் பிருந்தாவை நிச்சயம் பாராட்டலாம். மொத்ததில் படம் ஓகே.ரகம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து