முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வாரம் வெளியாகும் ராதே ஷ்யாம்

திங்கட்கிழமை, 7 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

பிரபாஸ் நடிப்பில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பிரமாண்டமான படம் ராதே ஷ்யாம். இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.  வரும் மார்ச் 11ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் கலந்துகொண்டனர். இது குறித்து பாடலாசிரியர் மதன் கார்கி பேசியதாவது… படத்தில் கைரேகை நிபுணராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். பல மொழிகளில் படமாக்கப்பட்டுள்ள ராதே ஷியாம், 1970-களில் ஐரோப்பாவின் பின்னணியில் நடக்குமாறு கதை அமைந்துள்ளது. எப்போதும் காதலுக்கும் காலத்திற்கும் இடையில் ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. அதை தான் இயக்குநர் பிரமாண்டமாக திரையில் வரைந்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் பிரபாஸ் மிக அற்புதமாக நடித்திருக்கிறார் என்றார்,  இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ்  வெளியிடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து