முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரேநாளில் ரூ.680 உயர்ந்தது: ரூ.40 ஆயிரத்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம் விலை !

திங்கட்கிழமை, 7 மார்ச் 2022      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.40,440-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்த படியே இருந்து வருகிறது. கடந்த 24-ம் தேதி உக்ரைன்- ரஷ்யா இடையே போர் தொடங்கிய போது தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அன்று ஒரு பவுன் ரூ. 40 ஆயிரத்தை நெருங்கியது. அதன்பின் 2 நாட்கள் விலை குறைந்து ரூ. 38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. மறுநாள் தங்கம் விலை மீண்டும் ரூ. 38 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று தங்கம் விலை ரூ. 40 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 40 ஆயிரத்து 440-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ. 5,055 ஆக உள்ளது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 1800 அதிகரித்து ரூ. 75 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 75.20க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!