முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

களைகட்டப் போகும் சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றம்

வியாழக்கிழமை, 10 மார்ச் 2022      ஆன்மிகம்
Image Unavailable

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா, இரண்டு ஆண்டுகளுக்கு பின் பக்தர்களுடன் கோலாகலமாக நடக்க உள்ளது. முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சி ஏப்ரல் 14-ம் தேதியும், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 16-ம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவிற்காக மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

கொரோனா தொற்றுப் பரவலால், மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா இரண்டு ஆண்டுகளாக கொடியேற்றம், திருக்கல்யாணம், திக் விஜயம் உள்ளிட்ட நிகழ்வுகள் பக்தர்களின்றி நடந்தது.முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு, தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் இரண்டு ஆண்டுகளாக நடக்காத நிலையில் பக்தர்களுடன் இந்தாண்டு நடைபெறவுள்ளது. 

திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்ட நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி ஏப்ரல் 5-ம் தேதி நடக்கிறது. இதை தொடர்ந்து அம்மனுக்கு ஏப்ரல் 12-ல் பட்டாபிஷேகம், 13-ல் திக் விஜயம், 14-ல் திருக்கல்யாணம், 15-ல் தேரோட்டம் நடக்கிறது. அதை தொடர்ந்து ஆற்றில் அழகர் இறங்குவதற்கு, கள்ளழகர் அலங்காரத்தில் அழகர்கோவிலில் இருந்து வருவதை வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது.

ஏப்ரல் 16-ம் தேதி அதிகாலை 5:50 முதல் 6:20 மணிக்குள் வைகையாற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் எழுந்தருளுகிறார். இரு ஆண்டுகளுக்கு பின் மீனாட்சி திருக்கல்யாணத்தையும், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியையும் நேரில் காணவிருப்பதால் பக்தர்கள் உற்சாகத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து