முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி: பிரதமர் மோடிக்கு எடப்பாடி வாழ்த்து

வியாழக்கிழமை, 10 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டதில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது. இந்த 4 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

உத்தரப்பிரதேசம்,உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க.வின் மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நான்கு மாநிலங்களில் பதவியேற்கவுள்ள  புதிய முதல்வர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து