முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை கள்ளழகர் கோயிலின் ராஜகோபுர திருப்பணிகள் நாளை தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் (18-ம்படி கருப்பணசாமி சன்னதி ) திருப்பணி மராமத்து பணியானது சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு துவங்கவுள்ளதை முன்னிட்டு முதற்கட்ட பணியாக நாளை  13-ம் தேதியன்று பாலாலய சம்பரோஷணம் நடைபெறவுள்ளது.

அன்று காலை 6 மணிக்கு புண்யாகவாகனம், அக்னி ஆராதனம், ததுக்த ஹோமம், மஹாபூர்ணாகுதி, அக்னி ஸமாரோபனம், யாத்ராதானம், கும்பம் புறப்பாடு நிகழ்ச்சியும், இதனைத் தொடர்ந்து காலை 7.15 மணி முதல் 7.55 மணிக்குள் மீன லக்னத்தில் பாலாலய சம்ப்ரோஷணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆச்சார்ய பஹூமானம், ஆசீர்வாதம், சாற்றுமுறை, கோஷ்டிவினியோகம் வைபவம் நடைபெறவுள்ளது. இதனிடையில் ராஜகோபுரம் மராமத்து பணித் துவக்கத்திற்கான பந்தக்கால் முகூர்த்தம் விழா 7.45 மணி முதல் 8.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.

இந்த பூஜை நிகழ்வுகள் அனைத்தும் அர்த்த மண்டபத்தில் நடைபெறுவதால் காலை 9.30 மணிக்கு  நடைபெறும் அர்த்த மண்டப தரிசனத்திற்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிற நேரங்களில் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனம் செய்து கொள்ளலாம் எனவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து