முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதவி இயக்குனரின் நிலையைச் சொல்லும் படைப்பாளன்

திங்கட்கிழமை, 14 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

தியான் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் செபஸ்தியான் தயாரிப்பில் தியான் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் படைப்பாளன்.  இந்த படத்தில காக்கா முட்டை ரமேஷ் விக்கி மற்றும் பாடகர் வேல்முருகன், அஸ்மிதா, மனோபாலா, சதுரங்க வேட்டை வளவன், நிலோபர், அருவி பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜாக்குவார் தங்கம் இயக்குனர் தருண்கோபி, திருச்சி வேலுசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் தியான் பிரபு கூறுகையில், இப்படம் சினிமாவில் இயக்குனராக துடிக்கும் ஒரு உதவி இயக்குனரின் கதை. கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றிற்கு கதை சொல்லப் போன ஒரு உதவி இயக்குனரின் சொந்த கதை தான் இந்தப் படம். இன்று வரை சினிமாவில் வெவ்வேறு விதமான கதை திருட்டுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இவை அனைத்தும் மாற வேண்டும் என்பதே எங்களது ஆசை என்றார் இயக்குனர் தியான் பிரபு. படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவுற்ற நிலையில் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!