முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதற்கும் துணிந்தவன் விமர்சனம்

திங்கட்கிழமை, 14 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

தமிழகத்தையே கதி கலங்க வைத்த பொள்ளாச்சி சம்பவத்தை கையில் எடுத்து இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் படத்தை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். ஆனால் படத்தின் தொடக்கமும் முடிவும் டைட்டானிக் கப்பல் கதையாக மாறி இருக்கிறது. ஜெய்பீம்  படத்துக்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் என்பதால், அதிக எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. ஆனால், படம் தொடங்கி சிறிது நேரத்திலேயே அந்த எதிர்பார்ப்பு பொய்யாகத் துவங்கிவிடுகிறது. முதல் எட்டு நிமிடங்களுக்குள் ஒரு சண்டை, ஒரு பாட்டு முடிந்துவிடுகிறது. அதற்குப் பிறகு,  கதை நடக்கும் ஊர்களைப் பற்றியும் அந்த ஊர்களுக்கு இடையிலான பகை பற்றியும் சொல்ல நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்கிறார் இயக்குநர். படத்தின் பிற்பகுதியில் வரும் "சும்மா சுர்ருன்னு" பாடல், நன்றாக படமாக்கப்பட்டிருந்தாலும், தேவை இல்லாத இடத்தில் நுழைக்கப்பட்டிருக்கிறது. கண்ணபிரானாக வரும் சூர்யாவும் ஆதினியாக வரும் பிரியங்கா மோகனும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, நடன அமைப்பு, இசை எல்லாம் அட்டகாசமாக இருந்தும் கதை அழுத்தமாக இல்லாததால் படம் ஜொலிக்கவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து