முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குனி திருவிழாவை முன்னிட்டு பம்பையில் ஐயப்பனுக்கு இன்று ஆராட்டு நிகழ்ச்சி

வியாழக்கிழமை, 17 மார்ச் 2022      ஆன்மிகம்
Image Unavailable

பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 8-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து விழா நாட்களில் தினமும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடைபெற்றது. இன்று(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். 19-ந் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து